திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டிற்கு சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளது இதனால் அதன் விலையும் குறைந்துள்ளது.
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டிற்கு சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளது இதனால் அதன் விலையும் குறைந்துள்ளது.
திருப்பூர்
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டிற்கு சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளது இதனால் அதன் விலையும் குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பு
திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் சில்லரை மற்றும் மொத்த விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு சமீப காலமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சுரைக்காயின் வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் விலை பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் 14 கிலோ எடை கொண்ட சுரைக்காய் கட்டு மொத்த விற்பனை விலையாக ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 20 கிலோ பாகற்காய் மூட்டை ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 35 முதல் 40 கிலோ எடை கொண்ட அரசாணிக்காய் மூட்டை ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை சரிவு
10 கிலோ எடை கொண்ட அவரைக்காய் பை ரூ.300-க்கும், 15 கிலோ பீர்க்கங்காய் ரூ.500 முதல் ரூ.600-க்கும், 15 கிலோ புடலங்காய் கட்டு ரூ.150 முதல் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முட்டைக்கோஸ் விலை அடியோடு சரிந்துள்ளது. 50 கிலோ எடை கொண்ட முட்டைக்கோஸ் மூட்டை ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
14 கிலோ தக்காளி பெட்டி ரூ.120, 25 கிலோ சின்ன வெங்காயம் ரூ.500 முதல் ரூ.600, 45 கிலோ உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1000, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.16, கேரட் ரூ.30, பீன்ஸ் ரூ.30 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.