உடுமலை உழவர் சந்ைத விரிவுபடுத்தப்படுமா?
உடுமலை உழவர் சந்ைத விரிவுபடுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
உடுமலை உழவர் சந்ைத விரிவுபடுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
உழவர் சந்தை
விவசாயிகள் விளைவித்த பொருட்களை இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதே உழவர் சந்தை. உழவர் சந்தை உங்கள் சந்தை, விளைய வைப்பதும் உழவரே விலையை வைப்பதும் உழவரே என்ற கூற்றுக்கிணங்க 1999-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டு இன்று வரையிலும் எவ்வித குறைபாடும் இன்றி நாள்தோறும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது.
நிறைவான தரம், விளையும் குறைவு, வாடாத புத்தம் புதிய காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்களும் விரும்பி வந்து வாங்கி செல்கின்றனர். விவசாயிகளுக்கும் நாள்தோறும் நிலையான வருமானம் கிடைப்பதால் குடும்பத்தோடு வருகை தந்து காய்கறிகளில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் உடுமலை கபூர்கான் வீதியில் கடந்த 2000 ம் ஆண்டு உழவர் சந்தை அமைக்கப்பட்டது. அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு 64 கடைகளுடன் சந்தை அமைக்கப்பட்டது.
விரிவுபடுத்தப்படுமா?
ஆனால் சுமார் 96 விவசாயிகள் வரையிலும் விற்பனை செய்ய இயலும். காய்கறிகளைக் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடும் செய்யப்பட்டதால் விவசாயிகளும் காய்கறிகள், பழங்கள், தேங்காய், உள்ளிட்டவற்றை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சந்தையை விரிவுபடுத்த வேண்டியதும் அவசியமாக உள்ளது.
ஏனென்றால் காய்கறிகள் வாங்குவதற்கு வருகை தரும் பொதுமக்கள் வாகனங்களை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் காலை நேரத்தில் நிலவி வருகிறது. மாலை நேரத்தில் சந்தை செயல்படுவதற்கான திட்டமும் உள்ளதாக தெரிகிறது. அது செயல்படுத்தப்பட்டால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடும்.
எனவே உழவர் சந்தையை விரிவுபடுத்த வேண்டியதும் அவசியமாக உள்ளது. அதில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்துவதும் கடமையாகும். இதனால் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க இயலும்.