கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26½ லட்சத்துக்குநாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
ஈரோடு
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.
ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,304 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ரூ.26½ லட்சம்
இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 590-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 600-க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை ஒரே விலையாக ரூ.2 ஆயிரத்து 460-க்கும் விற்பனை ஆனது.
நாட்டு சர்க்கரை மொத்தம் ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்து 110-க்கு ஏலம் போனது.
இந்த நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர்.
Related Tags :
Next Story