தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட நேற்று காய்கறிகள் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட நேற்று காய்கறிகள் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மழையால் விலை அதிகரிப்பு
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நாள்தோறும் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது. மார்க்கெட்டில் காய்கறிகள் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது.
இதன் எதிரொலியாக மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதிலும் கடந்த வாரம் சில்லரை விற்பனையாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று ரூ.8 முதல் ரூ.12 வரை விலை அதிகரித்து ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிகள் விலை நிலவரம்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-
25 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.500-க்கும், 15 கிலோ எடை கொண்ட சுரைக்காய் பை ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும், 20 கிலோ எடை கொண்ட பாகற்காய் மூட்டை ரூ.1,200-க்கும், ஒரு காலிபிளவர் பூ ரூ.40-க்கும், 30 கிலோ எடை கொண்ட பீட்ரூட் மூட்டை ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிகளின் விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.