ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே நெல்லுக்கு சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே நெல்லுக்கு சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று களம்பூரில் நடந்த அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே நெல்லுக்கு சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று களம்பூரில் நடந்த அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாநில பொதுக்குழு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் களம்பூரில் உள்ள எஸ்.பி.எஸ். திருமண மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில தலைவர் டி.துளசிங்கம் தலைமை தாங்கினார். களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் ஸ்ரீராம் கே.மணி, சங்க தலைவர் கே.எல்.ஜி.அரிகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சங்கர் வரவேற்றார்.
மாநில செயலாளர் டாக்டர் ஏ.சி.மோகன் அறிக்கையை வாசித்தார். மாநில பொருளாளர் கணேச அருணகிரி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில துணைத்தலைவர் பி.நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஏ.ஏ.பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்
கூட்டத்தில் மாநில தலைவர் டி.துளசிங்கம் பேசுகையில், 'ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அரிசிக்கு 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் பேக்கிங்களுக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரியினை ரத்து செய்ய வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே நெல்லுக்கு சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதையும், சந்தை கட்டண வசூல் செய்வதையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக வேளாண்மை துறை அமைச்சரிடமும், வேண்மைத்துறை செயலாளர்களிடமும் கோரிக்கை மனு வழங்கப்பட்டு உள்ளது' என்றார்.
கூட்டத்தில் களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கு நினைவு பரிசாக திருவண்ணாமலை அண்ணாமலையார் உருவப்படம் வழங்கப்பட்டது. முடிவில் களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.ஆனந்த் நன்றி கூறினார்.