மார்பில் சாட்டையால் அடித்து முகரம் தினம் அனுசரிப்பு
வாணியம்பாடியில் மார்பில் சாட்டையால் அடித்து முகரம் தினம் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
முகமது நபியின் பேரன் ஹூசைன் இப்னு அலி பாலைவனத்தில் உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் எதிரிகளால் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய வரலாறுகள் கூறுகின்றன. இஸ்லாமியர்களில் ஒரு பிரிவான ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முகரம் மாதத்தில் முதல் பத்து நாட்கள் நோன்பு இருந்து முகரம் மாதத்தின் பத்தாவது நாளை ஹூசைன் இப்னு அலி இறந்த தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி நேற்று முகரம் தினம் கடைபிடிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் வசித்து வரும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் மார்பு, முதுகில் இரத்தம் வரும் வரையில் சாட்டையால் அடித்துக்கொண்டும், கருப்பு உடை அணிந்தும், துக்க பாடல் பாடியும் ஊர்வலமாக சென்றனர்.
Related Tags :
Next Story