மதிப்பெண் சான்றிதழ்களை வேலை வாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்
10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வேலை வாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வேலை வாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு இணையதளம் மூலம்
2021-2022 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று(வியாழக்கிழமை) வழங்கப்படவுள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
நேரடியாகவும் பதிவு
மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaippu.gov.in-ல் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே 10-ம் வகுப்பு பதிவு செய்த மாணவர்கள் 12-ம் வகுப்பினை கூடுதல் பதிவாகவும், பதிவு செய்யாதவர்கள் புதியதாக பதிவையும் இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.மேற்கண்டவாறு பதிவு செய்ய இயலாதபட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்து கொள்ளலாம். இதே நடைமுறையை பின்பற்றி 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்ற பின்பு மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.