இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்-அதிகாரி தகவல்


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தா்மபுாி:

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது என்று தா்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமாா் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச திருமணம்

சேலம் மண்டல இந்து சமய அற நிலையத்துறை சார்பில் 25 ஜோடிகளுக்கு வருகிற 23-ந் தேதி இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அப்போது மணமக்களின் பெற்றோர், மணமக்கள் அவசியம் நேரில் வர வேண்டும்.

விண்ணப்பத்தில் மணமகள், மணமகன் புகைப்படம், பிறந்த தேதி, வயது, தொழில், ஜாதி உள்ளிட்ட முழு விவரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். இருவரும் இந்துவாக இருப்பதோடு, முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும். திருமணத்தின்போது அனைத்து ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

13 நிபந்தனைகள்

மணமகள் அல்லது மணமகன் பெற்றோருடன் கூடிய புகைப்படம் திருமண படிவத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். திருமணத்துக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணம், திருப்பி தர மாட்டாது. அதேபோல் திருமணம் தொடர்பான விவரம், நகல்கள், மணமக்கள் தவிர வேறு யாருக்கும், தனிப்பட்ட முறையில், தகவல் அறியும் உரிமை சட்டம், வேறு எந்த சட்டப்பிரிவின் மூலமும் வழங்கப்படாது என்பன உள்ளிட்ட 13 நிபந்தனைகளுடன் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.

திருமணத்தின் போது மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story