மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி (வயது 30). இவருடைய கணவர் பிரசாத்குமார் (35). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் வெங்கடேஸ்வரி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னை கணவர் மற்றும் அவருடைய பெற்றோர் துன்புறுத்தி, வீட்டை விட்டு துரத்தியதாகவும், தனக்கு தெரியாமல் கணவர் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக பிரசாத்குமார் மற்றும் அவருடைய பெற்றோர் மீது வழக்குப்பதிவு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story