கொரோனா காலகட்டத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் - கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்


கொரோனா காலகட்டத்தில்  511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் - கல்வித்துறை ஆய்வில்  அதிர்ச்சி தகவல்
x

511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

சென்னை ,

கொரோனா காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதில் 11ம் வகுப்பை சேர்ந்த 417 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது .

இந்த நிலையில் திருமணமான மாணவிகளின் விவரங்களை சேகரித்து படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து படிப்பை தொடர்வதற்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .

கொரோனா காலகட்டத்தில் இத்தனை மாணவிகளுக்கு திருமணம் நடந்திருப்பது தமிழக அரசுக்கும் ,சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


Next Story