அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம்


அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம்
x

ராசிபுரத்தில் அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம் நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் டவுன் வி.நகர் 4-வது தெரு பகுதியில் கருப்பனார் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் வளாகத்தில் அரச மரமும் வேப்ப மரமும் அருகருகே உள்ளன. அரச மரத்தை சிவனாகவும், வேப்ப மரத்தை சக்தியாகவும் கருதப்பட்டு வருகிறது. நன்கு வளர்ந்த அரச வேம்பு மரங்களுக்கு அப்பகுதி மக்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பிரம்ம முகூர்த்தத்தில் மங்கள வாத்தியம் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்து மந்திரம் ஓதி, அரச மரத்திற்கும் வேம்பு மரத்திற்கும் முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேலும் திருமணத்தில் வைக்கப்படும் சீர் வரிசைகள் போல அரச வேம்பு திருமணத்திற்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர். அரச வேம்பு திருமண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story