14 வயது சிறுமியுடன் திருமணம்


14 வயது சிறுமியுடன் திருமணம்
x

நாட்டறம்பள்ளி அருகே 14 வயது சிறுமியுடன் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வீரமணி (வயது 32). இவர் குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்துள்ளார்.

இவருக்கும் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த 31-ந் தேதிதிருமணம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தாசில்தார் குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறவில்லை, புதுமனை புகுவிழா தான் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு 1-ந் தேதி திருமணம் நடைபெற்றதாக தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது

அதன்பேரில் தாசில்தார் தலைமையில் மண்டல துணை தாசில்தார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, மற்றும் போலீசார் மணமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வருவாய் துறையினர் மணமகன் வீரமணி மற்றும் அவரது பெற்றோர் அனைவரையும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் வீரமணி மீது நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story