மார்த்தாண்டம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மார்த்தாண்டம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாடி சந்தனம், மூலிகை திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹூதி, வேதிகா அர்ச்சனை, யாத்ரா தானம், கோ பூஜை, யாக சாலை பிரவேஷ பூஜைகள் நடந்தது. காலை 6 மணிக்கு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து பால், இளநீர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இவ் விழாவில் மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.