மாணவிகளுக்கு தற்காப்பு கலை கருத்தரங்கம்


மாணவிகளுக்கு  தற்காப்பு கலை கருத்தரங்கம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கருத்தரங்கம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி இயற்பியல் துறை சார்பில் மதிப்பீடு செயல்பாடு மற்றும் தொழில்துறை நெறிமுறைகள் சங்கத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் அறவாழி தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் பென்னி அன்புராஜ் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை பேராசிரியை சந்திரா வரவேற்றார். கூட்டத்தில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை விளக்கம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் செயல்முறை விளக்கங்கள் நடந்தது .இதில் சர்வதேச கராத்தே வீரர் கதிரவன் கலந்து கொண்டு மகளிர் சாதனை பற்றிய விளக்கங்களையும் பயிற்சிகளையும் செய்து காண்பித்தார். கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவி சுமித்ரா நன்றி கூறினார்.


Next Story