மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி


மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்டத்தின் கீழ் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெண் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, ஆசிரியை புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் மாணவிகள் தாங்கள் வெளியே செல்லும் போதும், வரும்போதும் தங்களை தாமே தற்காத்துக் கொள்வதற்காக உரிய பயிற்சி வழங்கப்பட்டது. தற்காப்பு கலைப் பயிற்றுனர் வேல்முருகன், பயிற்சி வழங்கினார். பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story