மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி
ரங்கப்பனூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
ரங்கப்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை மலர்கொடி முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவிகளுக்கான தற்காப்பு கலை குறித்தும் அதன் மூலம் மாணவிகள் தன்னை தற்காத்துக் கொள்வது மட்டுமின்றி உடல்நிலையை உறுதி செய்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சிமன்ற துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் திருமால்வளவன் மற்றும் மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story