மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி


மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொம்மடிக்கோட்டை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகிலுள்ள கொம்மடிக்கோட்டை சு.சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 6,7,8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் மாஸ்டர் நேசன் தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


Next Story