தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்
கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரில் தியாகி விஸ்வநாத தாஸ் 82-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தொழிலாளர் கட்சி தென் மண்டல தலைமை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் மகேந்திரன், அவை தலைவர் மகாராஜன், மாவட்ட துணை தலைவர் ஜெயபால், நகர தலைவர் செல்வம், பொருளாளர் மாடசாமி, நகர இளைஞரணி செயலாளர் கூடலிங்கம், ஒன்றிய தலைவர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் கார்த்திக், மாவட்ட மகளிர் அணி தலைவி உஷா, எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தியாகி விஸ்வநாததாஸ் உருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினார்கள். கூட்டத்தில் கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை நிறுவ வேண்டும். மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.