மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வரியை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
அரிசி, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறக்கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் துரைக்கண்ணு தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன் முன்னிலை வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதேபோல, திருக்கடையூரில் உள்ள தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் காபிரியேல் தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய குழு உறுப்பினர் அய்யப்பன் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். கொள்ளிடம் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிங்காரவேலன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.