மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி

தென்காசி:

மத்திய அரசு அரிசி, பருப்பு, பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசி பொருட்கள் மீது கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கணபதி தலைமை தாங்கினார். ஜி.எஸ்.டி. வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் அசோக் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், மாடசாமி, மணிகண்டன், மாரியப்பன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story