மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வாய்மேடு மின்வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மின்சார திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல கீழ்வேளூர் மின் வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் தலைமை தாங்கினார். இதில் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிக்கல் கடைவீதியில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.Next Story