மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருவாரூர்

தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நீடாமங்கலத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, நகர செயலாளர் தமிழ்மணி மற்றும் மாவட்ட, ஒன்றிய குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல வலங்கைமானை அடுத்த ஆலங்குடி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் ராதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள், சுப்ரமணியன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story