திட்டக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திட்டக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநத்தம்,
திட்டக்குடி அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவமனை முன்பு நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மதிவாணன், சண்முகம், குணசேகரன், மாயவன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு அசோகன், மாவட்டக்குழு ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு தலைமை மருத்துவரை நியமிப்பதோடு, சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை தரக்குறைவாக பேசும் டாக்டர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இரவு காவலர், சுகாதாரமான கழிப்பறை போன்ற வசதிகளை செய்யவேண்டும். மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீரை அகற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மகாலிங்கம், பன்னீர்செல்வம், வரதன், மாணிக்கம், முத்துலட்சுமி, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.