மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள், செவிலியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். நரம்பியல், சிறுநீரகம் போன்ற சிகிச்சை பிரிவை உருவாக்கி, டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். உள்நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வகங்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுப்பதோடு, மருந்துகளின் கையிருப்பையும் உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.கணேசன், செல்வராஜ், வசந்தாமணி உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story