மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கணேசன், சின்னத்தம்பி, விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை, கோவை, மதுரை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து நெல்லை, நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லும்
அனைத்து பஸ்களும், கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பு பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறி சர்வீஸ் ரோட்டில் இறக்கிச் செல்லும் பஸ் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கொடுத்தனர். இந்த மனுவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.