மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியக்குழு கூட்டம் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. மாநில, மாவட்ட குழு முடிவுகளை விளக்கி செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி, ஒன்றிய செயலாளர் டி.ஜான்கென்னடி ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் வி. பூசாந்திரம், ஆர்.சுமதி, நகர செயலாளர் தமிழ்மணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமந்தபுரம் ஊராட்சி கிளியனூர் ரகுநாத காவிரி வாய்க்காலில் பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு, இதுவரை பணிகள் நடைபெறவில்லை. மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


Next Story