மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்
தாராபுரத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கண்ணுசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்களை வஞ்சிக்கும் அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் கழித்து ராணுவத்தில் இருந்து இளைஞர்கள் வெளியேற்றப்படுவார்கள். அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு சேவா நிதி என்று சொல்லக்கூடிய குறிப்பிட்ட தொகையை மட்டும் வழங்கிவிட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் ஏதுமின்றி வெளியேற்றப்படுவதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே மத்திய அரசு இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாலுகா செயலாளர் என்.கனகராஜ், கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுசாமி, கி.மேகவர்ணன், சுப்பிரமணியன், ஆ.மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.