மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடி ஏற்று விழா


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு   கட்சி கொடி ஏற்று விழா
x

மெஞ்ஞானபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடி ஏற்று விழா நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிக்கு மெஞ்ஞானபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கிருபா தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் ராஜபிரபு முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பி.பூமயில் கொடியேற்றி பேசினார். மாணிக்கபுரம் கிளை சார்பில் ஒன்றிய குழு உறுப்பினர் நேரு தலைமையில் சவுந்திரபாண்டி கொடியேற்றினார். மருதூர்கரையில் கிளை செயலாளர் பத்மாவதி தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் நேரு கொடியேற்றினார். பரமன்குறிச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் மகாராஜன் கொடியேற்றினார்.

உடன்குடியில் சுதந்திர போராட்ட தியாகி பூவலிங்கம் நினைவு ஒன்றிய குழு அலுவலகத்தில் பாலசிவசங்கர் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் சக்திவேல் கொடியேற்றினார்.


Next Story