மாசாணி அம்மன் கோவில் திருவிழா
மாசாணி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
கரூர்
சின்னதாராபுரம் அருகே சூடாமணியில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலில் 25-ம் ஆண்டும் பூக்குழி இறங்கும் திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூைஜகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் எல்லமேடு- கதர்மங்கலத்தில் இருந்து கரகம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
மதியம் கோவில் முன்பு தயாராக இருந்த பூக்குழியில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என பலர் ஒவ்வொருவராக இறங்கி சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story