கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண்பிணம்


கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண்பிணம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண்பிணம் கொலைசெய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு அருகே அனந்தமங்கலம் கண்ணப்பன் மூளை மகிமழை ஆற்றின் கிழக்கு பகுதியில் மதகு அருகே 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கழுத்து அறுபட்ட நிலையில் மிதந்துள்ளது. இதனை கண்ட கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கழுத்து அறுபட்டு ஆற்றில் மிதந்த இளைஞரின் கையில் ஆர்ஏ என்ற எழுத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்து, சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இறந்தவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது ஆற்றில் அடித்து வரப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story