பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்
விளாத்திகுளம் அருகே குமரெட்டியாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே குமரெட்டியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 300 ஆண்டு பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி மக உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) கழுவேற்றம் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேர் திருவிழாவும், 6-ந் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறும்.
Related Tags :
Next Story