கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் மார்ச் 7-ந் தேதி நடக்கிறது


கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் மார்ச் 7-ந் தேதி நடக்கிறது
x

கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் மார்ச் 7-ந் தேதி நடக்கிறது.

மதுரை,

திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம். இந்த விழா வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பொய்கை கரைபட்டி தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்வார். வழி நெடுகிலும் நின்ற சேவை சாதிக்கிறார்.

பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தெப்பத்திலிருந்து அன்று மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். இந்த தெப்ப உற்சவத்தை காண அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவ இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

தொடர்ந்து அன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. ெதப்ப உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்கா ணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story