குதம்பை சித்தருக்கு மாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு


குதம்பை சித்தருக்கு மாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு
x

மயூரநாதர் கோவிலில் குதம்பை சித்தருக்கு மாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குதம்பை சித்தர் ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். குதம்பை சித்தருக்கு மாசி விசாக நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு குதம்பை சித்தருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அப்போது சந்தனக்காப்பு அலங்காரத்தில் குதம்பை சித்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக பேரவையின் நிறுவனர் ராம. சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story