வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்


வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு 5.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இந்த ஊர்வலமானது கோவில் வந்தடைந்த உடன் உச்சிகால பூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழாக்கள் பல்வேறு சமுதாயத்தினரால் நடத்தப்படுகிறது.

சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் விழா வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று பால்குடம் ஊர்வலம், பாலாபிஷேகம், உச்சிகாலை பூஜை, புஷ்பாஞ்சலி, சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வருதல் உள்ளிட்டவை நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story