விஷம்குடித்து கொத்தனார் தற்கொலை


விஷம்குடித்து கொத்தனார் தற்கொலை
x

விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் தாலுகா நத்தத்துப்பட்டியை சேர்ந்த வீரைய்யா மகன் பரமசிவம் (வயது 24). கொத்தனார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆதலால் பரமசிவத்தை, அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த பரமசிவம் தோட்டத்திற்கு செல்வதாக கூறிச்சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து வீரைய்யா தோட்டத்திற்கு தேடிச்சென்ற போது பரமசிவம் விஷம் அருந்திய நிலையில் கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரமசிவத்தை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வீரைய்யா கொடுத்த புகாரியின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story