திருமண ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொத்தனார்
களியக்காவிளை அருகே உள்ள ஒற்றாமரம் பகுதியைச் சேர்ந்தவர் ரசலையன். இவருடைய மகன் அஜி (வயது 35), கொத்தனார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு பெண் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு பெண் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக அஜி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அஜி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆகாத ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.