தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
நாச்சியார்கோவில் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த கணேசன். இவருடைய மகன் கார்த்தி (வயது 29 ) கொத்தனார். இவருடைய மனைவி ஜோதிகா. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜோதிகா அவரது தாய் வீட்டுக்கு சென்றார். இதன் பின் அவா் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார். நேற்று காலையில் தூங்கி எழுந்து ஜோதிகா பார்த்தபோது கூரை வீட்டின் மையத்தில் இருந்த மூங்கில் உத்தரத்தில் புடவையால் கார்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.இது குறித்து ஜோதிகா கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story