கொத்தனார் கொலை: கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
கொத்தனார் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்
மதுரை
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 39). கொத்தனார். இவர் கடந்த 1-ந்தேதி 3 மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தென்பரங்குன்றத்தை சேர்ந்த தீனா, இவரது நண்பர்கள் விக்னேஸ்வரன், சிங்கராஜா ஆகிய 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் தீனா உள்பட 3 பேரும் கடந்த 3-ந்தேதி திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர். சரணடைந்த 3 பேரையும் மேல் விசாரணைக்காக நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் தலைமையில் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story