தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை


தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
x

தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

தஞ்சாவூர்

திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட எழுத்தாணிவயல் கிராமத்தை சேர்ந்த மாரி என்பவரின் மகன் முத்துக்குமார் (வயது23). கொத்தனார். சம்பவத்தன்று இரவு வீட்டின் மின் விசிறியில் தூக்குப்போட்டு முத்துக்குமார் தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முத்துக்குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story