பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு. பொன்னமராவதி கிளை சார்பில், போக்குவரத்து கழக பணிமனை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதி பணிமனை முன்பு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்கி நடத்தி முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளியை வெறும் கையோடு அனுப்பக் கூடாது. ஓய்வூதிய கால பண பலன்களை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களை ஏமாற்றாதே, தொழிலாளர்களின் குறைகளுக்கும், ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் சிவஞானம், ராஜேந்திரன், சின்னச்சாமி, மனோகரன், வீரய்யா, சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.