மாசித்திருவிழா ஆலோசனைக் கூட்டம்


மாசித்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணியசுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழா நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கிருஷ்ணன், வணிகர் சங்க நிர்வாகிகள், காய்கனி மார்க்கெட் நிர்வாகிகள், திருவிழாக்கள் நடத்தும் அனைத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் 10-ம் திருவிழா அன்று பால்குடம் எடுத்து வரும் 12 ஊர்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்குள் மேல் நடத்தக்கூடாது, சாதி ரீதியான வாசகங்களோ, தலைவர் படம் பொறித்த பனியன்கள் அணியக்கூடாது, சாதித்தலைவர்கள் படம் போட்டு விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது, 10-ம் திருவிழாவன்று மதியம் 12 மணிக்குள் பால்குடம் கோவிலுக்கு எடுத்து வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story