குழந்தைப் பேறு மருத்துவமுகாம்


குழந்தைப் பேறு மருத்துவமுகாம்
x

குழந்தைப் பேறு மருத்துவமுகாம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பு அத்தி ஆயுஷ் மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்கான இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. அறங்காவலர் ம.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். சித்தமருத்துவ அலுவலர் சி.கலையரசி, ஆயுர்வேத மருத்துவ அலுவலர் எஸ்.கீர்த்தனா, இயற்கை மற்றும் யோகா மருத்துவ அலுவலர் கே.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் ஜி.ரேவதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மருத்துவர் அருண் சின்னையா முகாமை தொடங்கி வைத்தார். ஓமியோபதி மருத்துவர்கள் சி.ஆண்டனியா மினிட்டா, வி.சித்ரா, எல்.பாரதி, எம்.வினோத்குமார், இயற்கை மருத்துவர்கள் ஜி.சத்தியவதி, கே.எழில்பாரதி, ஆர்.சதீஷ் உள்ளிட்டோர் 437 பேருக்கு சிகிச்சை அளித்தனர். திட்ட அலுவலர்கள் வி.இன்பகுமார், பி.இந்துமதி, ஆர்.மோகன்பிரபு ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவர் சி.சதீஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story