மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில்பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தென்திருப்பேரை:
மாவடிபண்ணை அரசு மேல்நிலை பள்ளியில் 1992 - 1997-ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ,மாணவியர் துபாய், பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டத்திலிருந்து வந்து தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜெயந்தி வரவேற்று பேசினார். தங்களது ஆசிரியர்களுக்கு பொன்னாடை, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். தமிழ் ஆசிரியர் சங்கர நாராயணன், அறிவியல் ஆசிரியை முத்தம்மாள், ஆசிரியை சாந்தி ஆகியோருக்கு 1992-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை படித்த மாணவ-மாணவிகளை அறிமுகம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் கேக் வெட்டியும், குழு புகைப்படம் எடுத்து கொண்டும் தங்களது பழைய அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. வினாயக சுந்தரம் நன்றி கூறினார்.