மாவீரன் மஞ்சள் படை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்


மாவீரன் மஞ்சள் படை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
x

மாவீரன் மஞ்சள் படை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

மாவீரன் மஞ்சள் படை அரியலூர் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் பாபு, மாநில அமைப்பு தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு ேபசினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக செந்துறை ஒன்றியம் சார்பாக அரவிந்தனும், தா.பழூர் ஒன்றியம் சார்பாக சரவணனனும், உடையார்பாளையம் நகர செயலாளராக பாலமுருகனும், மாவட்ட இளைஞர் அணி தலைவராக சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவுக்கு கோவில் கட்டுதல், அரியலூர் மாவட்டம் முழுவதும் கிளை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கட்சி கொடி ஏற்றிவைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story