கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் மற்றும் சமூகத்தில் வீரத்துடனும், துணிச்சலுடனும் சாதனை செயல்கள் புரிந்த பெண்களுக்கு 'கல்பனா சாவ்லா' விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.
2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இதற்கான விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அசலாக தபால் வாயிலாகவும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-3 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சேரும்படி அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 0416-2221721 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.