மே தின கிராம சபை கூட்டம்


மே தின கிராம சபை கூட்டம்
x

ராமானுஜபுரம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

ராமானுஜபுரம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

கிராம சபை கூட்டம்

கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு பேசினார். ஊராட்சியில் 100 சதவீதம் குடிநீர் குழாய் வழங்கப்பட்டுள்ளது.

தீர்மானம்

தூய்மையான ஊராட்சியாக செயல்படுவது, வரவு- செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் கும்பகோணம் உதவி கலெக்டர் பூர்ணிமா, வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் சங்கர், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, மற்றும் மருத்துவத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல் கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், உமையாள்புரம், தியாகசமுத்திரம், அலவந்திபுரம், சத்தியமங்கலம், சருக்கை, உம்பளப்பாடி, ஆதனூர், கொந்தகை, ஓலைப்பாடி, திருவைக்காவூர், திருமண்டங்குடி, கூனஞ்சேரி, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றன.


Next Story