லாரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மே தின ஊர்வலம்


லாரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மே தின ஊர்வலம்
x

திருவண்ணாமலையில் லாரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மே தின ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை லாரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் மே தின விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

செயலாளர் மனோகர், பொருளாளர் பாலு, முன்னாள் தலைவர் ராஜா, முன்னாள் பொருளாளர் நேசமணி ஆகியோர் முன்னிலை வகித்தார். மேஸ்திரி மோகன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர் செந்தில்மாறன், தொழிலதிபர் பசீர்அகமது, எஸ்.கே.பி. கல்வி குழுமம் கருணாநிதி, திருவண்ணாமலை அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் தனுசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மே தின விழாவை தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் திருவண்ணாமலை மண்டித் தெருவில் தொடங்கி காமராஜர் சிலை, காந்தி சிலை, அண்ணா சிலை வழியாக சென்று நாவக்கரையில் அம்பேத்கர் சிலை அருகில் நிறைவடைந்தது.


Next Story