மே தின பேரணி
பாளையங்கோட்டையில் மே தின பேரணி நடந்தது.
சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்களின் சார்பில் 8 மணி நேர வேலை உரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பாளையங்கோட்டையில் மே தின பேரணி நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பிருந்து புறப்பட்டு வ..உ.சி. மைதானம் வழியாக லூர்துநாதன் சிலையை வந்தடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில துணைப்பொதுச்செயலாளர் திருச்செல்வன், மாநில குழு உறுப்பினர் மோகன், மாவட்ட துணை தலைவர் பீர்முகம்மது ஷா, ஜோதி, சரவணபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட உப தலைவர் ரங்கன் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் ராஜன் நன்றி கூறினார்.
ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் நெல்லை டவுன் ஆர்ச் முன்பு மே தின பேரணி நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சங்கரபாண்டியன், மாநிலத்துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டவுன் ஆர்.ச் அருகே தொடங்கிய பேரணி வாகையடி முனையில் முடிந்தது. அங்கு மே தின பொதுக்கூட்டம் நடந்தது.