கூடலூரில் மே தின பேரணி


கூடலூரில் மே தின பேரணி
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மே தின பேரணி நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் பகுதியில் மே தினம் பல்வேறு தொழிலாளர்கள் அமைப்புகள் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. கூடலூரில் கட்டிட மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வாசு தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் சகாதேவன், குணசேகரன், முகமது கனி, சி.கே. மணி, புவனேஸ்வரன், துயில் மேகம், ராஜா, காஞ்சனா, யோகண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கூடலூர் காந்தி திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் 1948-ம் ஆண்டு தொழிற்சாலை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் சட்டங்களை திருத்தியதை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். இதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பிலும் மே தின விழா கொண்டாடப்பட்டது.


Next Story