பொதுத்தோ்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டிசீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


பொதுத்தோ்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டிசீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தேனி

அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் வழிபாட்டில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தும் பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story